தலைவராக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் நியமனம்
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் திங்கட்கிழமை (05.10.2026) முறைப்படி இடம்பெற்றன.
இதன்படி, புதிய நிர்வாக சபையின் தலைவராக முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பின்வரும் சான்றோர்கள் புதிய நிர்வாக சபை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்:
பிரதித் தலைவர்: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் ,உப தலைவர்: அம்பாறை மாவட்டப் பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹீர்,செயலாளர்: ஓய்வுபெற்ற ஆசிரியர் ஐ.எல்.குத்தூஸ்,பொருளாளர்: கிழக்கு மாகாண முன்னாள் கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.ஆர்.ரஷீத்
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிர்வகிப்பு மற்றும் சமூகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வக்பு சபையின் வழிகாட்டலின் கீழ் இந்நியமனங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிருபர்
பாறுக் ஷிஹான்


