சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் கடந்த 28.09.1993 அன்று இலங்கை விமானப்படையின் தாக்குதலில் பலியான 20பொதுமக்களுடைய 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 28.09.2026 திங்கட்கிழமை பிற்பகல் சங்கத்தானையில் அமைந்துள்ள அவர்களுடைய நினைவாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது சாரதா சனசமூக முன்றலில் இருந்து தீப ஒளியுடன் நினைவாலயத்தை வந்தடைந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
அஞ்சலி நிகழ்வில் உயிரிழந்தவர்களுடைய பெற்றோர்,பிள்ளைகள்,சகோதரர்கள்,உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
1993ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி இலங்கை விமானப்படை சங்கத்தானைப் பகுதியில் குண்டு வீச முற்பட்ட வேளையில் அப்பகுதி மக்கள் அங்கிருந்த பதுங்குழிக்குள் தஞ்சமடைந்திருந்தனர். இதன்போது விமானப்படை பதுங்குகுழி மீது நடத்திய தாக்குதலில் அதற்குள் தஞ்மடைந்திருந்த சிறுவர்கள்,முதியவர்கள் என 20பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

