உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்லுண்டாய் பகுதியில் திண்மக்கழிவு மேடு – பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

e0ae95e0aeb2e0af8de0aeb2e0af81e0aea3e0af8de0ae9fe0aebee0aeafe0af8d e0aeaae0ae95e0af81e0aea4e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aea4e0aebf | Pathivu News
கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெகதீசன், யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் இ. தயாளன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன், மாநகர சபை உறுப்பினர்களான என். எம். அப்துல்லாஹ், எஸ். சொரூபன், ரி. மயூரன் கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் ப. கஜமுகன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவி சிரேஷ்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கல்லுண்டாய் பகுதியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, நடைமுறைச் சாத்தியமானதும் நிலையானதுமான தீர்வொன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இவ் விசேட கூட்டம் கூட்டப்பட்டதாக என யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவசரமாகவோ அல்லது ஒரு தரப்பின் கருத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டோ தீர்மானங்களை மேற்கொள்வது பொருத்தமானதல்ல. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
கல்லுண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுப்பதற்கான தீர்வுகளை அடையாளம் காண்பதுடன், அவற்றை ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக மட்டுப்படுத்தாமல், தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தக்கூடிய நிலையான செயற்றிட்டமாக முன்னெடுக்க வேண்டும்
குறிப்பாக, பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, தற்போதைய நிலைமைகளுக்கு பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை நீண்டகால அடிப்படையில் நிலைபேறான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட செயலர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் கல்லுண்டாய் பகுதியில் திண்மக்கழிவு மேடு எரியூட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் புகைமூட்டத்தால் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாநகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு அனைத்துத் தரப்பினரும் இணைந்தவகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊