உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியை இராணுவத்தினரின் இயந்திர உதவியுடன் சுத்தப்படுத்த நடவடிக்கை..!

e0ae95e0aeb2e0af8de0aeb2e0af81e0aea3e0af8de0ae9fe0aebee0aeafe0af8d e0ae95e0af81e0aeaae0af8de0aeaae0af88 e0aeaee0af87e0ae9fe0af8de0ae9f | Pathivu News
கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியை இராணுவத்தினரின் இயந்திர உதவியுடன் சுத்தப்படுத்தி, அவ்விடத்தை உக்கும் கழிவுகளை மாத்திரம் சேகரித்து வைப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட இடமாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பின்னர் கல்லுண்டாய் பகுதியில் தற்போதுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆராய்வதற்கும், அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கும், மாவட்ட செயலர் ம.பிரதீபன் மற்றும் மாநகர சபை முதல்வர் வி மதிவதனி ஆகியோரின் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு சென்று இருந்தனர்
குறித்த களவிஜயத்தின் போது, கல்லுண்டாய் பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் முன்பகுதியில் ஒரு பகுதியை இராணுவத்தினரின் இயந்திர உதவியுடன் சுத்தப்படுத்தி, அவ்விடத்தை உக்கும் கழிவுகளை மாத்திரம் சேகரித்து வைப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட இடமாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இவ்விடத்தில் அப் பகுதி பொதுமக்களின் பங்கேற்புடன் கொண்டு வரப்படும் கழிவுகளைப் பரிசீலித்து, அவை உக்கும் கழிவுகளா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே குறித்த இடத்தில் சேகரிப்பதற்கான நடைமுறையை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
உக்கும் கழிவுகளைத் தவிர்ந்த ஏனைய கழிவுகள் கொண்டு வரப்பட்டால், அவற்றை மாநகர சபையினால் மீள எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டது.
அத்துடன், கல்லுண்டாய் பகுதியில் தற்போது எரிந்து கொண்டிருக்கும் கழிவுக் குவியல்களை இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் உக்கும் கழிவுகளை உரிய முறையில் சேகரித்து, அவற்றை இயற்கை உரமாக மாற்றும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊