கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையின் 07 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம் இன்று திங்கட்கிழமை(21.09.2026) கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையில் இடம்பெற்றது.
தொற்றா நோய்க்கான ஆரோக்கிய உடல் பரிசோதனையும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கும் இந்த மருத்துவ முகாமில் நீரிழிவு, கொலஸ்ட்ரோல், பிரசர், சிறுநீரகம், கண், உடற்பருமன், சுட்டி நிறை, உயரம் என்பன பரிசோதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
கல்முனை அஹ்மட் அலி வைத்தியசாலையின் தவிசாளர் எம்.எம். இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வில், நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு தங்கள் உடல் பரிசோதனையை மேற்கொண்டு பயன்பெற்றனர்.
டாக்டர் புஷ்பலதா லோகநாதன் மற்றும் டாக்டர் மயூரன் ஆகியோர் இம்மருத்துவ முகாமில் இணைந்து கொண்டு உடல்களைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
பொதுமக்களின் நன்மை கருதி இந்த குறுகிய கால ஏற்பாட்டைச் செய்த வைத்தியசாலையின் தவிசாளர் எம்.எம். இஸ்ஸதீன் மற்றும் முகாமையாளர் ஏ. சாஜித் அஹமட் ஆகியோருக்கு பொதுமக்கள் இதன்போது தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
நிருபர்
எம்.எஸ்.எம்.ஸாகிர்


