அஹுங்கல்ல, எலதொட்ட சந்தை வீதித் தடையின் போது ‘ஐஸ்’, ஹெரோயின் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துச் சோதனையிட்ட போதே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து 01 கிலோகிராம் 194 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 217 கிராம் ஹெரோயின் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் குஷ் ஆகிய போதைப்பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?

