உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நேபாளத்தில் வெள்ளத்தின் கோரம்..! உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு

nepal floods death toll rises to 157 | Pathivu News
நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.
இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
எனினும் மண்சரிவு காரணமாகவே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த அனர்த்தம் காரணமாக ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்துள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் திடீரென நேற்று வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
அதேநேரம் வௌ்ளம் காரணமாக பாரியளவில் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp