செய்திகள்

ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகின்றது

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது.

சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரிகளை குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமளவில் நிவாரணம் வழங்குவதாக குறிப்பிடுகிறார்.

நாடு அரிசியின் விலை 230 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சந்தையில் 250 ரூபாவுக்கே அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

அரிசி உற்பத்தியாளர்களே அரிசியின் விலையை இன்றும் தீர்மானிக்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள். இந்திய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை நாணய அலகில் 150 ரூபாவை செலவிடுகிறார்கள்.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது.

வரி உள்ளடங்களாக ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்கள் 215 ரூபாவை செலவிட நேரிடும்.

இவ்வாறான நிலையில் அவர்களால் எவ்வாறு 220 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்

 

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp