அத்துருகிரிய – ஹபரகட, முல்லேகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இரு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதலே காரணம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாடொன்றில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘ஹபரகட கசூன்’ என்பவரின் உறவினர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (17.08.2026) இரவு இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 29 வயதான வர்த்தகர் ஒருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரே இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் மூன்று தோட்டாக்கள் தீர்க்கப்படும் சத்தம் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய உடனேயே துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் சம்பவ இடத்திலிருந்த அயலவர்கள் ‘அத தெரண’ செய்திச் சேவைக்குத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?

