குரு பூர்ணிமா தினம் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலில் மிகச் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
ஆன்மீக வாழ்வில் உயர்வினை நல்கும் “குரு பூர்ணிமா” நிகழ்வானது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் மஹராஜ் தலைமையில் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் உள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோவிலில் நேற்றைய தினம் (29.07.2026) திகதி மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
காலை 07.00 மணி முதல் விசேட நைவேத்தியம் மற்றும் அர்ச்சனை, பஜனை, குரு பூர்ணிமா தின உரைகள், இல்ல மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் ஆரதி என்பன இடம்பெற்றதுடன் இந்த பூசை நிகழ்வுகளில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவி பொது முகாமையாளர் சுவாமி பிரம்மண்யானந்தர் மஹராஜ், உமாதீசானந்தர் ஜீ மஹராஜ், மட்டக்களப்பு கல்லடி காயத்திரி பீடத்தின் பிரதம குரு சிவயோகச் செல்வர் சாம்பசிவம் சிவாச்சாரியார், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரம் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் உள்ளிட்ட ராமகிருஷ்ண மிஷன் பிரிவு பொறுப்பதிகாரிகள், இல்ல மாணவ மாணவிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டு இறைசி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

