ஶ்ரீமத் தவத்திரு முத்துக்குமாரு மயில்வாகனம் சுவாமிகளின் 41 ஆவது குருபூசை வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிராமத்தில் அதன் முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இன்னு செவ்வாய்க்கிழமை(21.07.2026)காலை 11:00 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. இதில் நினைவுரைகளை கலாநிதி துரை கணேசமூர்த்தி, ஓய்வு பெற்ற கிராம அலுவலர், உட்பட பலரும் நிகழ்த்தினர்.
முன்னதாக முத்துக்குமாரு மயில்வாகனம் நினைவாக செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றதனை தொடர்ந்தே சந்நிதியான் ஆச்சிரமத்தில் நினைவுரைக்கள் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
மயில்வாகனம் சுவாமிகள் (1913–1985) ஈழத்தின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியார் ஆவார். 1940-ஆம் ஆண்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ‘ஆனந்தாச்சிரமம்’ எனும் அமைப்பை நிறுவி, ஏழைகளுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி இறை பணியாற்றினார். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடரான இவர், 1985-இல் சமாதியடைந்தார்.
சுவாமிகளின் மறைவிற்குப் பின்னர் அவரின் பிரதம சீடரான மோகனதாஸ் சுவாமிகள் ‘சந்நிதியான் ஆச்சிரமத்தை’ உருவாக்கி மயில்வாகனம் சுவாமிகளின் வழித்தடத்தில் ஆன்மீகப் பணிகளைத் தொடர்ந்து
செயற்படுத்திவருகின்றார். இன்றைய குரு பூசையில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் தொண்டர்கள், அடியவர்கள், சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?

