செய்திகள்

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது

வவுனியாவில் ஐயப்ப சாமிகள் சபரிமலை யாத்திரைக்காக அவசரகால கடவுச்சீட்டு மற்றும் வீசா, விமான விமான கட்டணம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கையினை முன்வைத்து மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது.
எனவே இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக மற்ற கட்சிகள் செல்வதென்பது சாத்தியமில்லை.

ஒன்றாக இணைந்து ஒரு மேசையில் இருந்து விவாதித்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும்போதே அது வலுவானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.
அதன் மூலமே புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான கோரிக்கையினை முன்வைக்கலாம் என்ற கடமைப்பாட்டை நாம் செய்யமுடியும்.

தமிழரசுக் கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்ற செயல்.

தேர்தல் வெற்றிகளை வைத்து இதனை பார்க்கமுடியாது.
ஒற்றுமையான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கின்றபோதே எமது மக்களும் அதை விரும்புவார்கள்.

அந்த பலத்தின் மூலமே அரசாங்கத்தின் பார்வையை எமது பக்கம் திருப்ப முடியும்.
தனித்தனியாக செயற்பட்டால் அதைவைத்து அரசியல் செய்யும் நிலையில் புதிய அரசு ஈடுபடும்.

பிரிந்து சென்றதால் நாம் பல பாடங்களை கற்றிருக்கிறோம்.
எனவே நாங்கள் செய்வோம். நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியமற்ற ஒன்றாகவே பார்ப்பதாக செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp