இலங்கையினுடைய வடபகுதியின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருடனான சந்திப்பு ஒன்று லண்டனில் இடம்பெறவுள்ளது.
அரும்பு கல்வி மேம்பாட்டு மையத்தின் நிறுவுனர் திரு. ந.சச்சிதானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வானது,
ஜுலை 14, செவ்வாய்க்கிழமை
மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை லண்டன் ஹைகேட்ஹில் முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இலங்கையினுடைய வட மாகாணத்தின் கல்வி மற்றும் அபிவிருத்தி சார்ந்த பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளன.
குறிப்பாக முன்பள்ளிக் கல்வியில் யாழ் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு,
ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதில் பல்கலைக்கழகத்தின் வகிபாகம்,
வட மாகாணத்தின் கல்வி, சமுக, கலாச்சார, பொருளாதாரம் மற்றும் அரசியல் மையமாக யாழ் பல்கலைக்கழகம் திகழ்வது பற்றிய உரையாடல்.,
வடக்கின் அபிவிருத்தியில் யாழ் பல்கலையின் பங்களிப்பு தொடர்பாகவும்,
பட்டப்படிப்பிற்கும் வேலை வாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளி தொடர்பிலும் அது சமூகத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம் தொடர்பாகவும்,
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?

