செய்திகள்

காசை சேர்க்கிற வழியை பாருங்கோ- அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

e0ae95e0aebee0ae9ae0af88 e0ae9ae0af87e0aeb0e0af8de0ae95e0af8de0ae95e0aebfe0aeb1 e0aeb5e0aeb4e0aebfe0aeafe0af88 e0aeaae0aebee0aeb0 | Pathivu News

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு அறிவுறுத்தினார்.

நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த, சுயாதீன நிறுவனம் என்ற வகையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பு மற்றும் வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் நிதிச் செயற்பாடுகளை செயற்றிறன் மிக்கதாக்குவதற்கு நல்லதொரு பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்புக்களின் முழுமையான முன்னேற்றங்களை நெருக்கமாக ஆராய்ந்த பின்னர், மத்திய வங்கியினால் நிதி ஸ்திரமாக்கல் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஈடுகொடுக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டவுடன் சொத்துக்களின் தரநிலையில் பாதுகாப்பான முன்னேற்றம் மற்றும் முன்மதியின் அடிப்படையில் அவதானத்தை முகாமைத்துவம் செய்துகொண்டு மூலதனத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக நிதி கட்டமைப்பில் சாதகமான செயல்திறன் எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊