தம்பகாமம் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம்(29.06.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுப்பிரமனியம் சுரேன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திரு. எஸ். சுஜிதரன், கிராம அலுவலர் எஸ். விஜிதா, விளையாட்டு உத்தியோகத்தர் திரு. கே. கரிந்துகஜன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எம். பிரதீபன் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும்,
பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் அமைந்த இப்போட்டித் தொடர், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


What’s your Reaction?

