செய்திகள்

பேஸ்புக், வட்ஸ்அப் செயலிகள் மீள இயங்க ஆரம்பித்துள்ளது

e0aeaae0af87e0aeb8e0af8de0aeaae0af81e0ae95e0af8d e0aeb5e0ae9fe0af8de0aeb8e0af8de0ae85e0aeaae0af8d e0ae9ae0af86e0aeafe0aeb2e0aebf | Pathivu News

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று (11) நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

நேற்றிரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.

இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தது.

அதில், ‘தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.
முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.’ என்று பதிவிட்டுள்ளது.

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp