யாழ்ப்பாணம் உடுத்துறை இந்து ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வவுனியூர் ரஜீவன், அஜந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வியான ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமியே 6 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்த உலக சாதனையை நிலைநாட்டினார்.
குறித்த நிகழ்வு நேற்று(28.06.2026) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது. 2 மணி 30 நிமிடம் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி குறித்த சிறுமி உலக சாதனையை நிகழ்த்தினார்.
இந்த சாதனையானது உலக சாதனை மட்டும் அல்லாது இலங்கை நாட்டில் முதலாவது சாதனை ஆகும். அத்தோடு யாழ் மாவட்டத்தின் முதலாவது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
குறித்த சாதனையானது, ராபா உலக சாதனை புத்தகத்தில் இன்று பதிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரன் அவர்களால் “உலக நாட்டிய இளவரசி” என்று மகுடம் சூட்டி வைக்கபட்டது.
இந்த நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன், ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றினர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/4406300849626941


