மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் 2025 க்கான (2026) நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவிகள் மற்றும் சித்திபெற்ற மாணவிகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (24) காலை ஒன்றுகூடலின் போது பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது பரீட்சையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவிகள் மற்றும் சித்தி பெற்ற மாணவிகள் கல்லூரி முன்றலிலிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க, நிகழ்வின் அதிதிகளாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார் மற்றும் திருமதி எம்.ஏ.றிஸ்மியா பானு, அதிபர் எஸ்.சாந்தகுமார், பிரதி அதிபர், உப அதிபர்கள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் புடைசூழ ஒன்றுகூடல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் பிரதான மண்டபத்தில் அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஒன்பது பாடங்களிலும் “ஏ” தரச் சித்திகளைப் பெற்ற கிருஸ்ணமூர்த்தி மிதுசன்யா, எட்டுப் பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், ஒரு பாடத்தில் “B” தரச் சித்தியும் பெற்ற ஈஸ்வரன் மிதுஷா, ஞானசேகரம் தேவடிலக்ஷனா, சுதாகரன் டக்ஷனா, சசிகுமார் ஹர்சனா, எட்டுப் பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், ஒரு பாடத்தில் “C” தரச் சித்தியும் பெற்ற கிருவராசா யதுஷிக்கா, ஏழு பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், இரண்டு பாடங்களில் “B” தரச் சித்தியும் பெற்ற தினேஸ் சோபியா, லிங்கராஜ் அக்ஷயா, ஆறு பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், மூன்று பாடங்களில் “B” தரச் சித்தியும் பெற்ற சுவதீஸ்வரன் லோஜினி , ஜீவராஜ் றக்ஷியா,ஆறு பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், இரண்டு பாடங்களில் “B” தரச் சித்தியும், ஒரு பாடத்தில் “C” தரச் சித்தியும் பெற்ற சதீஸ்குமார் பவித்திகா, ஆறு பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், ஒரு பாடங்களில் “B” தரச் சித்தியும், இரண்டு பாடங்களில் “C” தரச் சித்தியும் பெற்ற ராமச்சந்திரன் நிர்த்திக்கா, ராசதுரை வர்ஷிகா மற்றும் ஜெயகுமார் விசத்திரி ஆகியோர் பாடசாலை. நிர்வாகத்தால் பரிசுப் பொருட்கள் வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். அத்தோடு பரீட்சையில் சித்திபெற்ற மாணவிகளும் கௌரவப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(மட்டக்களப்பு நிருபர்)


