பாதுக்க, ஹோமாகம, கொட்டாவை, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளுக்கு இன்று (24.06.2026) 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை (25.06.2026) இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, மஹரகம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலடுவாவவிலிருந்து பொரலஸ்கமுவ வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
What’s your Reaction?

