உலகம் புதியவை முக்கிய செய்திகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!

canada shooting kills three | Pathivu News
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர் அடங்குவர்.
சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என மாண்ட்ரீல் காவல்துறைத் தலைவர் ஃபாடி டகர் தெரிவித்தார்.
கோட்-டெஸ்-நெய்ஜஸில் பகுதியில் நண்பகல் இந்தத் துப்பாக்கிச் சூடு தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே துப்பாக்கி ஒன்று நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த சாட்சி ஒருவர், துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
காயமடைந்த அதிகாரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மான்ட்ரியலின் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியான கோட்-டெஸ்-நெய்ஜஸில், கிழக்கு பகல் நேரம் 11:30 மணிக்கு (ஜிஎம்டி 15:30) பிறகு துப்பாக்கிச் சூடு நடந்தது.
அருகிலுள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், உள்ளூர் மெட்ரோ சேவையும் நிறுத்தப்பட்டது.
சந்தேக நபர் நீண்ட தூரம் சுடும் துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக காவல்துறை நம்புகிறது.
தாக்குதலாளி 29 தடவைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp