உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிச் சாதனை மாணவிகள் பாராட்டிக் கௌரவிப்பு!

batticaloa student success | Pathivu News

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2025 (2026) நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (22) கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கல்லடி உப்போடை பிரதான வீதியிலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிபர், பிரதி அதிபர், உபஅதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் அதிபரால் பாடசாலைக் கொடியேற்றப்பட்டு, பிரதான மண்டபத்தில் அதிபர் சதாசிவம் தர்முதாஸ் தலைமையில் கௌரவிப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஒன்பது பாடங்களிலும் “ஏ” தரச் சித்திகளைப் பெற்ற கதீஸ்வரன் அஜித்தனா, விஜேந்திரன் நிதுஷா, ரத்தினசிங்கம் துஷ்யா, கண்ணன் பிருந்திகா, கமலராஜாசர்மா ஹரிணி, தனஞ்செயன் ஹம்சிகா மற்றும் கலைச்செல்வன் அஸ்விகா ஆகியோர் மாலை அணிவித்துப் பரிசில் வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டனர். அத்தோடு எட்டுப் பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், ஒரு பாடத்தில் “B” தரச் சித்தியும் பெற்ற ஞானேஸ்வரன் ஹர்ஷாயினி, எட்டுப் பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், ஒரு பாடத்தில் “C” தரச் சித்தியும் பெற்ற தர்மலிங்கம் சர்விகா, ஏழு பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், இரண்டு பாடங்களில் “B” தரச் சித்தியும் பெற்ற சஞ்சித்நிமல் ஷெபோனி நிரேஷ்மிகா, ஜெயக்குமார் மகிமா மற்றும் சதீஸ்வரன் கஜானியும், ஏழு பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், ஒரு பாடத்தில் “B” தரச் சித்தியும் ஒரு பாடத்தில் “C” தரச் சித்தியும் பெற்ற கோதாஸ் தாருணிசாவும், ஏழு பாடங்களில் “ஏ” தரச் சித்தியும், இரண்டு பாடங்களில் “C” தரச் சித்தியும் பெற்ற ராஜ்குமார் ஹரிணித்தா உட்பட சித்தி பெற்ற அனைத்து மாணவர்களும் பாடசாலை நிர்வாகத்தால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் தமிழ்த்தினப் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள்,ஹொக்கியில் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள், சிதம்பரக் கணிதப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற ஜே.யதுசாணி ஆகியோரும் சான்றிதழ் மற்றும் பதக்கம் அணித்துக் கௌரவப்படுத்தப்பட்டனர்.

(மட்டக்களப்பு நிருபர்)

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

 

 

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp