பிரணவம் அறக்கட்டளை நடாத்தும் முதலாவது சர்வதேச சைவ மாநாடு “வாழ்வியலில் திருமுறைகள் திருமுறைகளில் வாழ்வியல்” எனும் தொனிப்பொருளுக்கு அமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கோவை திருப்பேரூர் ஆதீனத்தைச் சேர்ந்த திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரும், திருஞானசம்பந்தர் ஆதீனத்தைச் சேர்ந்த அருட்குருநாதர் ஸ்ரீமத் சிவாகர தேசிக சுவாமிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மாநாட்டின் போது மாநாட்டு ஊர்வலம், ஆன்மீக உரைகள் ,சிறப்புச் சொற்பொழிவுகள், மாணவர்களுடைய கலை நிகழ்வுகள், மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


