வவுனியா, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் குழப்பநிலை ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் தனியார் தாதியர் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு மாணவர்கள் பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கிகாரமுள்ள சான்றிதழ் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என என கூறப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் கற்கை நெறிய பூர்த்தி செய்த 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கல்லூரியின் பணிக்குழுவுக்கும் மாணவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற அங்கு குழப்பநிலை ஏற்ப்பட்டது.
இதனையடுத்து மாணவர்களால் பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் கல்லூரியில் ஐவரை கைது செய்திருந்ததுடன் மேலதிக விசாரணைக்களுக்காக பாதிக்கப்பட்ட மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
மாணவர்களின் கோரிககைக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடியதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும வலியுறுத்தி இருநதார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


