அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும், அதற்கான கையெழுத்திடும் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தம் தற்போது நிறைவடைந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்ததோடு , ஹோர்முஸ் ஜலசந்தியில் வாஷிங்டன் விதித்திருந்த கடற்படை முற்றுகை முடிவுக்கு வருவதாகவும் அறிவித்தார்.
ஒப்பந்தத்தின் சரத்துகள் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் முடிவுக்கு வரும் என்றும் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.
தோல்வியை ஏற்றுக்கொண்டு சரணடைவதைத் தவிர அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் வேறு வழியில்லை என்பதை ஈரானிய மக்கள் நிரூபித்துள்ளனர் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

