இலங்கையிலிருந்து பிரான்சிற்கு தப்பியோடிய சந்தேக நபரான பிரசன்னா நாகலிங்கம் , இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் 2022 செப்டம்பரில் அபிராமன் பாலகிருஸ்ணன் என்பவரை கொலை செய்தமை தொடர்பிலும் மற்றைய ஒருவரை காயப்படுத்தியமை தொடர்பிலும் பிரசன்னாவை நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கனடாவின் நீதிதிணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.
சந்தேகநபர் அஜந்தன் சுப்பிரமணியம் எனவும் அழைக்கப்படும் பிரசன்னா நாகலிங்கம் இலங்கையின் ஆவா குழுவின் தலைவர் என கருதப்படுகின்றார் என தெரியவருகின்றது
லங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கிய சமூக விரோத குழுவே ஆவா குழு என தெரிவிக்கப்படுகின்றது
ஆவா குழுவின் போட்டி குழுவான எல்சி போய்ஸ் என்ற குழுவை இலக்குவைத்து பிரான்சில் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டதாகவு சந்தேக நபர் மீது குற்றம் சுமத்திப்பட்டுள்ளது
பிரான்ஸ் தலைநகரின் வடபகுதி புறநகர் பகுதியில் உள்ள லகோர்னவை தமது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவருவதற்காக இந்த இரண்டு குழுக்களும் மோதலில் ஈடுபட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் நாகலிங்கமும் அவரது ஐந்து சகாக்களும் தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு கத்திகள் உட்பட கூரான ஆயுதங்களை பயன்படுத்தி 2022 செப்டம்பர் 22ம் திகதி லகோர்னவ் பகுதியில் வாகனத்திலிருந்த இருவரை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.