உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் முயற்சியிலும் வளர்ச்சியிலும் துணை நிற்போம்..! யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

support persons with disabilities | Pathivu News

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்றைய தினம்(09.06.2026) யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தின் இருக்கின்ற 500 ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமாகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இன்றைய தினம் காலையிலிருந்து போட்டிகள் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றதாகவும், அதற்கு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைகள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாராட்டுவதோடு அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும், பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இச் செயற்பாட்டை சிறப்பாக மேற்கொள்வதாகவும், அதற்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் காத்திரமான பங்களிப்பபையும் வழங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும்,
இன்றைய நிகழ்விலும் கடந்த ஆண்டு நிகழ்வுகளிலும் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டவர்கள் மாற்றுத்திறனாளிகளாகவிருந்தும்
சமூகத்திலே உயர்ந்தவர்களாகவும், சாதனை படைத்தவர்களாகவும் சாதனை படைத்து கொண்டிருக்கின்றவர்களாக விளங்குவதனை அடையாளப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், தெற்காசிய விளையாட்டுக் போட்டிகளில் பங்கு பற்றி பதக்கம் பெற்றவர்களும் இன்று கலந்து கொண்டு இருப்பதும் மகிழ்வான விடயம் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் ஒதுங்கியிருந்த காலம் போய் இன்று உயர்ந்த நிலையில் விளங்கிவருவதாகவும், இன்றைய தினம் 84 போட்டிகள் நடாத்தப்பட்டு அதில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு பங்கு பற்றி இருப்பதாகவும் அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைத்திருப்பதாகவும், விளையாட்டு நிகழ்வுகளோடு முடித்து விடாமல் உங்களது முயற்சியிலும், வளர்ச்சியில் என்றும் துணை நிற்போம் எனவும், இந்த நிகழ்வில் 15 பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் பதவிநிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருப்பதோடு அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் இத் தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது. இன்றைய போட்டியில் 84 வகையான விளையாட்டுக்கள் நடைபெற்றன.

இவ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், நல்லூர் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சங்கானை பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். மேலும் நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான
மாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

 

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp