மே 18 தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமைகளை நினைவுகூரும் முகமாக ஸ்காட்லாந்தில் நேற்றைய தினம்(18.05.2026) அமைதி நடைப்பேரணி இடம்பெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முதன் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, கலை மற்றும் கலாச்சார அமைச்சராகிய திருமதி டாக்டர் துஷான்லி உபேந்திரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
எமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ் பற்றாளர்கள், தமிழ் மக்கள் மற்றும் ஸ்கோட்லாந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டு நீதிக்கான குரலை எழுப்பினர்.
மேலும்,
* Colm Merrick – MSP Anniesland and Drumchapel
* Alison Thewliss – MSP Glasgow Central
* Graham Campbell – Glasgow City Councillor
ஆகியோரும் இந்த பேரணியில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்


