செய்திகள்

பிரிட்டன் சென்ற நம்மவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்

கடந்த மூன்று வருடகாலமாக டியாகோகார்சியா தீவில் சிக்குண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் சென்றமையால் நிம்மதி பெருமூச்சி வெளியிட்டுள்ளனர்.

இந்து முத்திரத்தின் தீவான டியாகோ கார்சியாவில் மிகமோசமான நிலையில் மாட்டியிருந்தவர்கள் பிரிட்டன் சென்று சேர்ந்துள்ள நிலையில் தங்கள் உயிர் திரும்பிவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

47 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை இரவு பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ளதை சட்டத்தரணிகளும் அவர்களிற்காக குரல் கொடுத்தவர்களும் நீதிக்கான பெரும் தினம் என வரவேற்றுள்ளனர்.

லண்டனிற்கு வந்து சேர்ந்தவர்களில் 12 சிறுவர்களும் உள்;ளனர்.
இவர்கள் தற்போது லண்டனின் புறநகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் புகலிடம் பெறும்நோக்கில் இவர்கள் பயணித்த படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்ததால் இவர்கள் டியாகோகார்சியாவில் சிக்குண்டனர்.
நாங்கள் அனைவரும் கடலில் உயிரிழந்துவிடுவோம் என நான் நினைத்தேன்

,ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்கு முயல்வதா அல்லது அனைவரும் கடலில் மடிவதா சிறந்தது என என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன்.

இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் டியாகோகார்சியா தீவை சென்றடைந்ததை பிரிட்டனின் உள்துறை அமைச்சர்கள் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக கருதினார்கள்.

இவர்களின் தலைவிதி குறித்து நீண்ட சட்டப்போராட்டங்கள் இடம்பெற்றன.
தமிழர்கள் அந்த தீவில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக சட்டத்தரணிகள் அந்த தீவிற்கு சென்றுவந்தனர்.

அந்த தீவில் மூன்றுநாட்கள் தான் தங்கியிருப்போம் என நினைத்தோம் ஆனால் மூன்றுவருடங்கள் தங்கியிருக்க நேர்ந்தது என பெண் ஒருவர் தெரிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp