உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பொதுமக்களில் 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை