Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்பார் எனது கனவும் பார் குமாரும்

பார் எனது கனவும் பார் குமாரும்

வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலைகளுக்கான அனுமதிபத்திரமும், கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபானசாலை அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிhல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுளளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நேற்று (4) தெரிவித்துள்ளார்

கடந்த அரசாங்கம் அரசியல் இலஞ்சமாக பலருக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கியுள்ளது

இதன் படி மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளும், தென்மாகாணத்தில் 48,வடக்கு மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45,வட மத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30, வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 அனுமதி பத்திரங்கள் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் மொத்தமாக 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2, கம்பஹா 8, களுத்துறை 8, காலி 9,மாத்தறை 5,அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை , கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அனுராதபுரம் 4, பொலநறுவை 3. புத்தளம் 6, குருநாகல் 8 . பதுளை 9, மொனராகலை 7, இரத்தினபுரி 6, கேகாலை 2 என்ற அடிப்படையில் மொத்தமாக 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அனுமதி பத்திரம் ஏதும் வழங்கப்படவில்லை.

2024 ஜனவரி முதல் இவ்வாறு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்சி தாவலுக்காக அரசியல் இலஞ்சமாகவே மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments