சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அநுர அரசாங்கம் தொடர்ந்தும் இணக்கம் தெரிவித்து சேர்ந்து செயற்படுவதற்கு ஜனாதிபதியை பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அதிதிகள் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.