வவுனியாவில் மழை பெய்யாத நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் வவுனியாவில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவந்தது,
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கிராமங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது.
தற்போது மாவட்டத்தில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளது.
இதனால் வெள்ளம் தேங்கிய பகுதிகளிலிருந்து நீர் வடிந்தோடி வருகின்றது.
அத்துடன் சீரற்ற காலநிலையால் இதுவரை 204 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 55குளங்களில் உடைவு ஏற்பட்டுள்ளது.