Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்வடகிழக்கின் வைத்தியர்களுக்கு பணி இடமாற்றம்!

வடகிழக்கின் வைத்தியர்களுக்கு பணி இடமாற்றம்!

வட கிழக்கில் பணியாற்றிவரும் சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளரகள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது

கீழ்வரும் இடமாற்றமானது எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன் அடிப்டையில் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments