உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள் பிள்ளையான் மீது ஞானசார தேரர் சந்தேகம்..!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான விசாரணைகள் மற்றும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விதம் குறித்து கலகொட அத்தே ஞானசார தேரர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்து தாக்குதல் தொடர்பான மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதாக ஜனாதிபதியும் பிரதி அமைச்சரும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த போதிலும், ஓராண்டுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் அதனை உறுதிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த ‘B’ அறிக்கையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை என்பதைத் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்புச் சிறையில் இருந்தபோது ஸஹ்ரான் ஹாஷிமின் குழுவினருக்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதாக அசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து வினவிய அவர், தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களில் இத்தகைய தகவல்கள் ஏன் இடம்பெறவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
அரசியல் இலாபங்களுக்காகக் கூறப்பட்ட இத்தகைய கருத்துக்கள், உண்மைக்கு அப்பாற்பட்டவை என்பது இப்போது நீதிமன்ற அறிக்கைகள் ஊடாகப் புலனாகத் தொடங்கியுள்ளதாக ஞானசார தேரர் தனது உரையில் மேலும் விவரித்துள்ளார்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1497335608503643

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp