உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பஞ்ஞாகர தேரர் உள்ளிட்டோர் இலங்கை வருகை..!

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21.04.2026) காலை இலங்கையை வந்தடைந்தனர்.
இந்த சமாதான நடைபயணத்திற்காக ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற “Walk For Peace” சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமரக் கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம், ‘Clean Sri Lanka’ திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் மற்றும் தேசிய வடிவமைப்பு மையம் உள்ளிட்ட பெருமளவிலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு ஆதரவு வழங்குகின்றன.
இந்த நடைபயணத்தின் ஊடாக இலங்கையின் பௌத்த மரபுகள், பாரம்பரிய கைவினைக்கலைகள் மற்றும் கலை அம்சங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுகிறது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1956868415024313

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp