உள்ளூர் செய்திகள்

ரஷ்யா இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட வடக்கை சேர்ந்த இளைஞர்கள்.

e0aeb0e0aeb7e0af8de0aeafe0aebe e0ae87e0aeb0e0aebee0aea3e0af81e0aeb5e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb2e0af81e0ae95e0af8d | Pathivu News

இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குறித்த இளைஞன் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என அவருக்கு வெளிநாட்டு முகவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் மெல்லியடைய சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஒன்றாக இணைந்து பயணித்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக முகவர் குறிப்பட்டு இளைஞர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கப்பட்டு 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைன் நாட்டின் எல்லையில் போருக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்துள்ள நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 லட்சம் ரூபாய் வரையான பணத்தை இவர்கள் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை சுமார் 280க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் ரஷ்ய படைகளோடு இணைந்து, உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருவதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகியது.

அவ்வாறு இணைந்துள்ள இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒருவரை உக்ரேன் இராணுவம் உயிருடன் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காணொளி ஒன்றும் கடந்த 21ஆம் திகதி வெளியாகியிருந்தது.

இலங்கையில் உள்ள ரஷ்ய மாஃபியாக்கள், மூலமாக ரஷ்ய ராணுவத்திற்கு ஆட்கள் திரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையிலேயே 6 தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ரஸ்ய படைகளில் இணைக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

https://pathivunews.com/

https://tamilwin.com/

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp