புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ளதால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை கையளிக்குமாறு அரசு அறிவித்துள்ளது
இதுவரை ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
முன்னாள் எம்.பி.க்கள் குறித்த குடியிருப்புகளை விட்டு வெளியேறாவிட்டால் அந்த குடியிருப்புகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பில் மாதிவெல வீட்டுத் தொகுதி புதிய நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து 40 கிலோ மீற்றர்களுக்குள் வீடு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் மட்டும் 110 வீடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.