உள்ளூர் செய்திகள்

வட மாகாண ஆளுநர் தலமையில் பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் நடைபெற்றது.

e0aeb5e0ae9f e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae86e0aeb3e0af81e0aea8e0aeb0e0af8d e0aea4e0aeb2e0aeaee0af88e0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வட மாகாண ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர்,
எதிர்வரும் நாட்களில் தாழமுக்கமொன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லை.
ஆயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.
பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் – செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்தில் உள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.
அவற்றை சட்ட ரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள்.
தேவையேற்படின், பொலிஸாரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு திணைக்களங்களும் மற்றைய திணைக்களங்களை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக இந்தப் பணிகளை செய்யுங்கள்.
மேலும், பல இடங்களில் வாய்க்கால்களுக்குள்ளும் வீதிகளிலும் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுதான் வழி.
பல தடவைகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்கவேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 வெள்ள அபாய இடர் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் இதன்போது குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலும் இடரை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பதாக மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் மாவட்ட மருத்துவமனை ஊடாக செல்லும் கால்வாய் துப்புரவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட மாவட்டச் செயலர், மக்கள் இடரின்போது இடம்பெயர நேரிட்டால், அவர்களை தங்க வைப்பதற்குரிய நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்வாய்கள் அனைத்தும் ஏற்கனவே துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.
நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் கூறுகையில்,
யாழ். மாவட்டத்தில் நேற்று 6 மணிநேரத்தினுள் 130 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவானமையால் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.

யாழ். மாவட்டத்தின் உப்பாறு மற்றும் தொண்டமனாறு நன்னீரேரிகளினதும் வழுக்கையாறினதும் வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் தடுப்பணை கதவுகள் இம்முறை முன்னதாகவே திறக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்படும் நிலையில், அதை கருத்தில் கொண்டு அவை திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 18.3 அடியாக உள்ளது.

350 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவானால் 30 அடி வரையில் நீர் மட்டம் உயர்வடையக்கூடும்.
இருப்பினும், நீர் வெளியேற்றும் பிரதேசத்துக்கு வாய்க்கால்களை அண்மித்து உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என அவர் தெரிவித்துள்ளார்

இடர் நிலைமை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இரவிலும் பணியாற்றுவதற்கு பணியாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான வீதிகளை அண்மித்து மக்களின் வீட்டு மதில்கள் அமைந்திருப்பதன் காரணமாக வெள்ள நீர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை உருவாக்க முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, வீடுகள் மற்றும் மதில்கள் அமைப்பதற்கான அனுமதியை பெற்ற பின்னர், அதற்கு முரணாக அவற்றை அமைப்பதால் இந்த நிலைமை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

எனவே, அனுமதியை வழங்குவது மாத்திரமின்றி, அவற்றை தொடர் கண்காணிப்புக்கும் உட்படுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.
இடர் நிலைமையின்போது தீவகத்தில் உள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதார பணிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.
அவ்வேளை, கடற்படையினர் தமது உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர்.
குறிகாட்டுவான் இறங்குதரையிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இரண்டு படகுகளையும், புயல் நிலைமை ஏற்பட்டால் பாதுகாத்து தருவதற்கு கடற்படையினரின் உதவியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோரினார்.

அதற்கும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர்.
எதிர்வரும் இடர் நிலைமைகளின்போது பொதுமக்கள் இடர் முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் எனவும்,
அதேநேரம் யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும்,
வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/srilanka

https://pathivunews.com

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp