Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்தமிழ் மக்களுடன் சீனா நல்லுறவை மேம்படுத்த விரும்புகின்றது- சீன தூதுவர்

தமிழ் மக்களுடன் சீனா நல்லுறவை மேம்படுத்த விரும்புகின்றது- சீன தூதுவர்

கடந்த பொது தேர்தலில் வடபகுதி மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது என இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்பப்hணத்தில் தெரிவித்துள்ளார்

கடந்த தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது.
யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுகிறது.

இனங்களிடையிலான ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் காட்டும் குறியீடாக தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது என என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சீனாவின் நீண்டகால நண்பனாக இருக்கிறது.

இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல முடிவுகளையும் சீனா மதிக்கிறது.
இந்தியா இலங்கையின் மிக நெருக்கமான அயல் நாடாக இருக்கிறது.

ஆகவே இந்தியாவுக்கும் இலங்கைகுமிடையில் பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதை சீனாவும் விரும்புகின்றது.

இந்த வருட இறுதியில் அனுர குமார திஸாநாயக்க இந்தியாக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு எப்போதும் வருகை தரலாம்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதை சீனா விரும்புகின்றது

வடபகுதியில்; கொரோனா காலத்தில் சீனா உதவி வந்துள்ளது.
குறிப்பாக சினோபாம் தடுப்பூசி, உலர் உணவு பொருட்கள், மீன் பிடி வலை என பல உதவிகள் செய்யப்பட்டது.

தமிழ் மக்களுடன் நல் உறவை மேம்படுத்தவே சீனா விரும்புகின்றது என சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments