விவசாயிகளுக்கு கால போகத்திற்கான உர மானியம் வழங்குவதற்கான முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பயிர்செய்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை பொறுத்து விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்