இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றம் கூடுகிறது.
இன்றைய அமர்வில், 2002 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ சமூக நலன்புரி உதவித் திட்டம் தொடர்பாக விவாதம் நடத்தப்படவுள்ளது.
இந்த விவாதத்தின் பின்னர், அஸ்வெசும திட்டத்தை அங்கீகரிப்பதற்கான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
