செய்திகள்

கம்பஹாவை சேர்ந்த சிங்களப் பெண்மணி யாழில் மரணம்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவுக்காக வந்த பெண்ணே விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடி என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் கடந்த 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சுற்றிபார்க்க வந்துள்ளனர்

கடந்த 10 திகதி காங்கேசன்துறை நோக்கி காரில் சென்ற போது காரும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp