சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்று அதன் அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் போது பொலிஸார் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்
இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் அலுவலகத்திற்கு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்துச் செல்லப்பட்ட போதே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்துக் குறித்த பணிமனைக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட போது சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களை பொலஸார் கைப்பற்றியுள்ளனர்
மீட்கப்பட்ட மாதிரி வாக்குச் சீட்டில் கட்சி ஒன்றின் சின்னத்திற்கும் இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கள்ள வாக்குச்சீட்டுக்கள் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாhர் தெரிவித்துள்ளனர்