உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களின் அத்துமீறிய பிரச்சினைக்கு 2 நாட்டு அரசுமே தீர்வு காணவேண்டும்– கடற்படை

தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது.

கடற்படையினர் இந்த பிரச்சினையை சமாளிப்பதில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு, இதற்கு அரசியல் ரீதியான தீர்வொன்று தேவை என கடற்படை வலியுறுத்தியுள்ளது.

கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அட்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ, கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை உணவக வளாகத்தில் நேற்று (15-09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்டதாவது, ‘தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபடும் பிரச்சினை எமது வாழ்நாளில் தொடரும் பிரச்சினையாகும்.
கடற்படையினர் என்ற ரீதியில் இதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

இதுவரை எமது தரவுகளை ஊடகங்களுடன் பகிர்ந்து வருகிறோம். அதேசமயம், கடந்த அனைத்து அரசாங்கங்களிலும் இதற்கு அரசியல் ரீதியான தீர்வொன்று தேவை என வலியுறுத்தியுள்ளோம்’ என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும், இந்திய கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையுடன் நல்ல நட்புறவை தொடர்வதாகவும், புதிய வழிமுறைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளதாகவும், வடக்கு மீனவர் சமூகங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை காலி கலந்துரையாடலிலும் முக்கியமாக பேசப்படுவதாகவும், கடற்படையினர் அதில் அவதானமாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்தோடு, கடற்பரப்பின் வழியாக நடைபெறும் போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் கடத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும், சகல நாடுகளுடனும் இணைந்து கடல் வழியூடான போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் நூறு சதவீதம் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம், புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சுற்றி வளைப்புக்கள் நடைபெறுகின்றன.

வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்ததாவது, ‘வடக்கு கடற்பகுதியே அதிகளவில் பாதிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கத்தின் செய்தி அவர்களுக்கு சரியாக சென்றடைவதாக நம்புகிறோம்.
கடந்த 3 வாரங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கவில்லை.
எமது படகுகள் எல்லையில் இருக்கின்றன என்பதை அவர்கள் நேரில் காண்கிறார்கள்.

நமது மீனவர்கள் பெரும்பாலும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மீன்பிடிப் படகுகளைவிட எமது மீன்பிடிப்படகுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், தமிழக மீனவர்கள் எமது கடல் எல்லையில் பிரவேசிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்திய மீனவர்களின் மீறல்கள் சற்று குறைவடைந்துள்ளன’ என அவர் கூறினா

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp