உலகம்

ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மூலங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

e0ae90 e0aea8e0aebe e0aeb5e0aebfe0aea9e0af8d e0aea8e0aebfe0aeb5e0aebee0aeb0e0aea3 e0ae89e0aea4e0aeb5e0aebfe0ae95e0aeb3e0af88e0aea4 | Pathivu News

Pathivu Newsபாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

நேற்றைய தினம் மத்திய காசாவில் அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் டெய்ர் அல் பாலா பகுதியில் உள்ள நஸ்ரேத் முகாமில் உள்ள அல்- அவ்தா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் சிறுமி உட்படப் படுகாயமடைந்தவர்களுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெய்ர் அல் பாலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்த மசூதி மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குகளில் 26 பேர் உயிரிழந்தனர்.

93 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று காலை மத்திய காசா மற்றும் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

மத்திய காசா பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

இதற்கு மத்தியில் ஐ.நா.வின் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வண்ணம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இரண்டு புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp