உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் சேவை வரி அமுலாக்கம் ஒத்திவைப்பு.

2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் 2025.10.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் வதிவிடமற்ற ஆட்களால் (Non – Resident) டிஜிட்டல் சேவை வழங்கல்களுக்கு பெறுமதி சேர் வரி சேர்க்கப்பட்டுள்ளது.

ஆயினும், டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி அறிவிடும் போது அதற்கு இயங்கியொழுகுவதற்கு தயாராவதற்கு மேலதிக காலத்தை வழங்குமாறு நடைமுறைச் சாத்தியமான பல காரணங்கள் குறிப்பிடப்பட்டு வதிவிடமற்ற சேவை வழங்குநர்களால் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2025.10.01 ஆம் திகதிக்குப் பதிலாக குறித்த வரி நடைமுறையை 2026.04.01 ஆகத் திருத்தம் செய்வதற்காக, அதற்கு திருத்தப்பட்ட ஏற்பாடுகள் தற்போது 7 வரைவாக்கம் செய்யப்பட்டு பெறுமதி சேர் சட்டத்தைத் திருத்தம் செய்யப்பட்டு வருகின்ற சட்டமூலத்தில் சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான வரைபை உட்சேர்ப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்>மன்னாரில் 33வது நாளாக தொடரும் போராட்டம்.

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp