உள்ளூர் செய்திகள்

மட்டு களுவாஞ்சிக்குடியில் ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை அகழ நீதிமன்றம் அனுமதி

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம், குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கே இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் யு.ஆ.ஆ. ரவூப், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன், குருக்கள்மடம் கடற்கரை வீதியில் சந்தேகிக்கப்படும் இடத்தை அடையாளம் காட்டும் பாதுகாப்பு வலயம் அமைக்கவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு மீண்டும் நாளை காலை 9.30 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp