உள்ளூர் செய்திகள்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி மற்றொருவர் காயம்

கொழும்பு புறநகர் பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மாலனி புளத்சிங்கள வீதியில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் கல்கிஸ்ஸையைச் சேர்ந்த கிஹான் துலான் பெரேரா (25) என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், எட்டு பேருடன் சாலையில் நடந்து சென்றபோது குறித்த துப்பாக்கிதாரி தாக்குதல் நடத்தியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதமே இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp