உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடகிழக்கு கடையடைப்பு போராட்டத்திற்கு யாழ். பல்கலை மாணவர்கள் ஆதரவில்லை- ஒன்றிய செயலாளர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு–கிழக்கு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை என்று ஒன்றிய செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, தனிப்பட்ட அரசியல் கட்சியின் அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு அளிக்க முடியாது.

கடையடைப்பிற்கு அழைப்பு விடுவதற்கு முன், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும். பின்னர் பொதுவான திகதியில் மட்டுமே அறிவிப்பு விடப்பட வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுயமாக இயங்கும் அமைப்பாக இருப்பதால், ஒருசிலர் தனிப்பட்ட தீர்மானம் எடுத்து அதற்கு ஆதரவு கோரும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒன்றியம் இராணுவ பிரசன்னத்தை குறைக்க, பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகளை மீளளிக்க, மற்றும் அராஜகத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைகளுக்காக ஒன்றியம் குரல் கொடுத்தது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், சில தரப்புகள் தமது சுயலாபங்களுக்காக அரசியல் செய்வதை ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் துணை போகவுமில்லை என்றும் அனோஜன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணை பூரணமாக தயாரிக்கப்பட்டு, பாடங்கள் வழக்கமான முறையில் நடைபெறும். மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் வழமைப்போல் ஈடுபடுவார்கள்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp