இரத்தினபுரி தெல்வல பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு தமிழ்ப் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
52 வயதான பரமசிவம் காளியம்மா எனும் மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது, அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், அவரது கணவன் தேயிலை இலை வெட்டும் கத்தியுடன் வந்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரை காப்பாற்றும் நோக்கில் சுமார் 100 மீட்டர் தூரம் ஓடிய போதிலும், அவர் உயிர் பிழைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கு பின்னணியாக முறையற்ற உறவுத் தொடர்புகள் காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சந்தேகநபரான கணவன், மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும், அவரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ள
